Paper – Pulp – Paper

சமர்ப்பணம்:

தாமரையின் குரலுக்கு

நன்றியும் அன்பும் : CTC  ஐந்தினை  குழுமம்

பிரார்த்தனை: ஒரு நாள்  முகாம் என்பதைத்  தாண்டி
வாழ்வியலாக மாறுவதற்கு

December 9,Saturday,2017

Government Higher Secondary School – Kandigai

kandigai

நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஓர் அற்புதமாக மாறுவதை பல தருணங்களில் உணர்கிறோம். அப்படிப்பட்ட ஓர் சந்திப்பு தான் சென்னை ட்ரெக்கிங் கிளப் குழுவுடனான சந்திப்பு. குக்கு காட்டு பள்ளியில் இக்குழுவை சந்தித்ததன் தொடர்ச்சியாக இன்று கண்டிகை அரசு உயர் நிலை பள்ளியில் காகித மறுசுழற்சி பயிற்சி நடந்தேறியது.

வண்டலூர் கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிக்கு அவர்கள் பிரார்த்தனை கூட்டத்தின் போது சென்றடைந்தோம். வெகுநாட்களுக்கு பிறகு உயர்நிலை பள்ளியில் காலை பிரார்த்தனை கூட்டத்தைக் காணக் கிடைத்தது. வரிசையில் வந்த சிறுவர் சிறுமியர் வரிசையில் தத்தம் வகுப்புகளுக்குத் திரும்பச் சென்றது வெகு நாட்களுக்குப் பிறகு நம் கண்களுக்குக் கிடைத்த அறிய காட்சியாயிற்று.

பயிற்சிக்கு தயாராக வந்த சிறுவர் சிறுமியர் ஓர் மரத்தடியில் கூடினர். கடலைமிட்டாயுடன் அவர்களது அறிமுகம் தொடங்கியது. அங்கு எழுந்த கேள்விகளுக்கு ஆர்வமுடன் பதில்கள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு சிலருக்கு அப்பயிற்சியின் முக்கியத்துவம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தது. வேறு சில வகையில் அவர்கள் காகிதத்தை வீணடிக்காமல் உபயோகப்படுத்தி வந்தது குறித்துக் கருத்தைப் பரிமாறிக் கொண்டனர். செயல்முறை விளக்கத்தின் பின்னர் ஒரு சிறுமி “அண்ணா கோடு போட்ட காகிதம் எப்படி தயாரிப்பது” என்று வினவியவுடன் நாம் பதில் தேட வேண்டியக் கேள்விகள் இன்னும் பல உள்ளது என்று தோன்றியது.

குழுக்களாகப் பிரிந்து கூழிலிருந்து காகிதத்தை வார்த்தெடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் ஆர்வத்துடன் அவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் நமக்கு புலப்பட்ட சில விஷயங்கள், அவர்களிடத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். செய்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் மற்றவருக்கு கற்பித்தனர். அளவளாவிய ஒற்றுமை இருந்தது. இறுதியில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர் மற்றும் உறவினர்களுக்கு நன்றி, மற்றும் வாழ்த்து மடல்கள் அக்காகிதத்தில் உருவாகின. காகிதத்தைப் பரிமாறிக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிறுவர் சிறுமியர். “அண்ணா அடுத்த மாதத்தில் ஒரு சிறு குறிப்பேடுச் செய்து தருகிறோம்” என்றுக் கூறியவுடன் மனம்  நம்பிக்கை வானில் ஒரு முறை சிறகடித்து வட்டமிட்டு திரும்பியது.

“எந்த குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே……” என்ற பாடல் வரிகள் நம் காதில் ரீங்காரமிட்டன.

November 25, Saturday 2017

MEASI Academy of Architecture

MEASI

சமர்ப்பணம் : தும்பி

நன்றியும் அன்பும் : கக்கூஸ் வாத்திக்கு

பிரார்த்தனை: நாய் வண்டிக்குள் அடைக்கப்பட்ட  உயிர்களுக்கு

‘சிறு குழந்தைகள்’ மூலம் தொடங்கும் எந்த காரியமும் கண்ணாடியில் பட்ட ஒளிக் கீற்றைப்போலச்  சிதறி பல திக்குகளைச் சென்றடையும் என்ற எண்ணத்தைச் வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்துவிட்டு, சற்றே வளர்ந்த குழந்தைகளைக்  கையாள முனைந்தோம்.

இம்முறை நமது அன்றாடப் பயன்பாட்டு முறைப் பற்றிய ஊடாடும் அமர்வு ‘MEASI’ கட்டிடஎழிற்கலை மாணவர்களுடன் நடைப்பெற்றது. இவர்கள் தன் ஐந்து வருடப் படிப்பில் காகிதங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதனால், காகிதத்தின் மகிமையும் மற்றும் அதன்   மறுசுழற்சி முக்கியத்துவமும் பற்றி தெரிவிக்க வேண்டி கலந்துரையாடலுடன் தொடங்கியது அன்றைய பயிற்சி.

மாணவர்கள் எண்ணிக்கை சற்றே அதிகமாக இருப்பினும் குழுக்களாக பிரித்து கையாண்டமையால் பயிற்சி பணி எளிதாயிற்று. காகிதத்தைக் கிழித்து கூழாக்கும் வேளையில் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்கள் சுவாரஸ்யமாக அமைந்தது. அவ்வயதிற்கே உண்டான கேலி கிண்டல்கள் இடையிடையே அரங்கேறின. அவ்வப்போது அவர்கள் மேற்கொண்ட கேள்வி பதில் உரையாடல்கள் பயிற்சி சார்ந்தும் அமைந்தது. வட்ட வடிவாகவும், செவ்வகமாகவும் காகிதங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. பெண் பிள்ளைகள் கலைநயமிக்கவர்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வண்ணக் காகிதங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் சிறிது நேரத்தில் அவர்களுக்குள் நிபுணர் பரிந்துரைத் தொடங்கியது. அவர்களுக்குள்ளேயே சிலர் நிபுணர்களாக மாறி காகிதங்களுக்கு வண்ணம் சேர்க்கவும், இலை,மற்றும் பூக்கள் கொண்டு பல வடிவமைப்புகளோடு காகிதங்கள் உருவாக்கப்பட்டன. வெயில் ஒத்துழைத்ததனால் முகாமில் தயாரித்த காகிதங்கள் சிறிது மணி நேரத்தில் காய்ந்து எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்கள் கைகளில் தவழ்ந்தது.

பயிற்சி முடிவில் நடந்த கலந்துரையாடல் போது மாணவர்கள் முகங்களில் புரிந்தும், புரியாமலும் உணர்ச்சிகள் பிரதிபலித்தன. எனினும் சில மாணவர்கள் மறுசுழற்சி குறித்தும், மற்றும் சமூகத்தில் நமது பயன்பட்டு முறைக் குறித்துப் பதிவு செய்தக் கருத்தும், எப்போதும் நம்மை வழி நடத்தும் நம்பிக்கை ஒளிக் கீற்றாக மாறியது.

Slightly differing from our regular routine this time we tried to deal with a little “grown up children” – the students of MEASI Academy of Architecture. During their course of study they are in close contact with paper.  This workshop was conceptualized to bring some change in their perception towards usage of paper.

With the quote

“What you seek is seeking you.” – Rumi introductory session started with the grown up kids. After few minutes of warm-up session with the trainers students gave the feedback of their understanding towards consumerism and importance of recycling paper. Being exposed to various day today activities and chaos some of them were able to come up with informative points relevant and supportive to recycling of paper.

Following the introduction session students enjoyed tearing their drawing sheets, venting out their feelings for ‘REDO’ sheets. The participants count being a little high, with the cooperation of students it was managed by grouping them in smaller numbers. Individual group started getting into action slowly with interesting conversation about various topics. It was a mix crowd with enthusiastically involved students of ‘ACTION’ along with funny, mischievous lads as well. Rectangular and circular shape paper were created from the paper pulp. With their acrylic and water colors a group of girls started exploring their creativity in preparing colored papers as well. Their artistic inputs and creativity made them to lead the show. Gangs of students encircled these on the spot ‘expert’ trainers which resulted in papers with designs made out of leaves and flower petals, and splashes of paints. The hot sun helped the first batch of students to feel dried papers and they were able to write quotes and gift the same to their loved ones in their vicinity.

During the discussion at the end of the training session we could find students with lots of mixed expressions on their faces. Some were like do we really need to recycle paper, some were like ‘yes we did it’. Some of them expressed their satisfaction of learning something useful which has a close connectivity with the activity they are engaged in their daily routine of life. There were students with utmost happiness for making 2 or 3 sheets of paper after attempting for about 10 times.  After all these finally when few students expressed their understanding and responsibility towards consumerism, we felt at that juncture the intention of this workshop was initiated. By the end of the day we remembered……

“Once the seed of faith takes root, it cannot be blown away, even by the strongest wind. Now that’s a blessing.” – Rumi

 

October 30,Monday,2017

Sri Arunodayam Home for Mentally Challenged Destitute

ஸ்ரீ அருணோதயம் மன நலம் குன்றிய ஆதரவற்றோர் காப்பகம் 

Arunodhayam

‘நான் ‘…. ‘என்னால் எதுவும் முடியும்’ ….. ‘என்னைச் சுற்றி எல்லோரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்’……

மேற்கூறிய எண்ணங்களைப் பின்னுக்குத் தள்ளி உலகம் வேறு விதமாகக் காட்சி அளித்தத் தருணம் அது…….ஊனமான மனங்களால் கை விடப்பட்ட பேராண்மைக்கு நெருக்கமான ஆன்மாக்கள் வாழும்… அருணோதயம் காப்பகம்.நம் அனைவருக்கும் அப்பாற்பட்ட சக்தியை மனதில் கொண்டு கொட்டுகின்ற மழையில் இப்பயிற்சியை எப்படி செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தோடு  அங்கு கால் பதித்த கணம் நம்பிக்கையும், ஆர்வமும் பொங்க வரவேற்றனர் இரண்டு சிறுவர்கள். இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நம் கண் முன்னே கண்டக் காட்சி ஒரு கணம் நம்மைச் ஸ்தம்பிக்கச் செய்தது.

பிறந்ததிலிருந்து நமது மூளையானது வெளித் தோற்றத்தைக் கொண்டே எடைப்போட்டுப் பழகிவிட்டது. அறிவுக் கண் கொண்டு புறத்தைப் பார்த்துப் பழகிய நாம், மனக் கண் கொண்டு அக அழகைப் பார்க்க தவறி விடுகிறோம். இதை நினைவில் கொண்டு பார்க்கையில் நாம் உணர்ந்தது அவர்கள் கைகளில் இருந்த நேர்த்தியை தான். வட்டமாக அமர்ந்து காகிதத்தைக் கொண்டு பைகள் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் அண்ணன் எனப் பட்டவர் நம்மை அறிமுகப் படுத்தியவுடன் ‘என் பேரு பாஷா’…. ‘உன் பேரு ‘….. என்று அந்த சூழ்நிலையை சகஜமாக்கினர் அவர்கள்.

ஆறறிவும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு இருந்த தயக்கத்தை தகர்த்தெறிந்து நம்முடன் உரையாடி அந்நிலையை சகஜமாக்கினர் சிறுவர்கள். காகிதத்தை கிழித்துக் கொண்டே சுய அறிமுகத்துடன் அன்றைய பயிற்சி தொடங்கியது. காகிதத்தைக் கிழித்து அரைத்து கூழாக்கி, காகிதமாக வார்த்தெடுத்தனர். ஒரு முறை படி நிலைகளைக் கூறியவுடன் அவரவர் தானாக முன்வந்து கூழிலிருந்து காகிதத்தை செய்யத்  தொடங்கினர்.
அவர்கள் கைகளால் செய்த காகிதத்தை அங்கீகரிக்கும் பொருட்டு அவர்கள் எழுப்பிய ஒலி நம்மை மயிர்க்கூச்செரியச்  செய்தது.
பயில் முகாம் மும்முரமாக சென்று கொண்டு இருக்கையில் ‘ஒரு சின்ன தாமரை என் கண்ணில்’…….. என்ற பாடல் வரி காதில் விழுந்தது. அகத்தின் கண்களால் மட்டுமே இவ்வுலகை காணும் பாக்கியம் கொண்ட காசிமின் குரலில் தான் அப்பாட்டு ஒலித்தது.
‘அக்கா சாப்பிட போறோம்…. நீங்க வரல…’ என்று கேட்டுக் கொண்டே வரிசையில் கிழே சென்றனர்.காகிதங்கள் காய்ந்துக் கொண்டிருக்க சாப்பிடச் சென்று விட்டனர் சிறுவர்கள்…… அந்த காப்பகத்தை விட்டு வெளியே வருகையில்.. அடாது பெய்து கொண்டிருந்தது மழை…. அம்மழை ஓசையுடன் நமக்கு நினைவில் வந்தது……

 

“நமது செயல்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாமறிய முடியாது. ஆனால் ஒன்று, எதையுமே செய்யவில்லை என்றால் எதுவுமே விளையாது” – காந்தி

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

 

To the stories of children who knock the window shutters in traffic signals.
To the stories of children who lie hopeless of life in railway station
To the stories of children who have been traded

This place has it all. This place is not definitely for the faint hearted.
Not for the stories that they are, but because of the identities we have cremated
our lives into.

Sri Arunodhayam Home for Mentally Challenged Destitute

In a city like Chennai where every signal has one such child, this is one of the two homes dedicated to them. With our soaring high spirits competing with the monsoon, we navigated our way through flooded roads to reach the place. Namitha wagged her tail happily welcoming inside, followed by two children taking us to the second floor. As we have been trained to look at everything with our prejudices; ‘How do we interact with them…Will they be able to understand the process’ were a few questions that was lingering as we climbed up stairs. We never had a clue of what was awaiting us.
There were children who were busy making paper bags, for the not so specially abled urban crowd.

‘My name is Baasha and yours!?’ exclaimed a child and broke the ice for interaction. Soon we split ourselves into groups and started tearing paper that was left over from paper bags. ‘Paper is God and I cannot tear it’ said one of the boys and did not want to tear the paper.Soon we had enough torn bits to make pulp. ‘Pulp should be nicee like this to make paper ‘said a child and we affirmed. That is when we realised the learning process is so simple but we complicate it in our heads. And we can never teach anything to children, but be good learners. The first circular paper was thus made and they needed no more guidance for the rest. They thoroughly enjoyed the process. Soon the papers had creative craft work on them with rose petals. Children left for lunch through beautifully decorated staircase by Madhavan.

IMG_3277
More than the children, Ezhumalai who has been with the children for past fifteen years was very content. The need for burning the waste paper and buying new ones has now been reduced. He is more than confident that there will be no waste thrown from now on.There are a few workshops that give us a sense of complete content and hope.
This surely was one.Waiting to use recycled hand-made books, made by these little geniuses.

For contact :
Iyyappan : +91 -9444915803
https://sriarunodayam.org/

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
October 23,Monday,2017

St.Louis School for the Deaf and Blind Adyar

paper

 

After morning assembly twenty children gathered and were talking loudly, yet there was silence. Teacher conveyed something to the students and all of them instantly sprang up to wish ‘Good Morning’. We were quite perplexed, for this was one of those times when ‘Good morning’ moves you deeply and makes you question your being.

Day started with reading of ‘Thumbi’ and there were varied interpretations from each child.Followed by which we had a circle of introduction along with listing of our favorite activities. Some children had a whole page of favorite things which included talking, questioning, keeping campus clean, football etc.

‘Where all do we use paper’… ‘What happens after it is used’…’Where does it go’…. ‘whom does it affect’….what can we do about it’ were a few questions to the self. Refusing, reusing and recycling were the common options we all agreed upon as a solution. We decided to try recycling of used paper hands on. Though initially children were skeptical to touch pulp with hands later they started enjoying it. All eyes exclaimed and celebrated in joy when the first paper was made.

In no time, the old nine yards saree was filled with recycled paper. Soon we started exploring to get the paper more appealing with petals and leaves. Clock, bouquet, cross…creativity knew no bounds. Brother Xavier, Head Master of the school seeing the excitement of his children joined us in making paper. Closing circle had children expressing their learning through the day. With promises and hopes of children taking the initiative forward, we left the echoing campus.

– – – – – – – – – – – – – – – – –

காலை பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன் இருபது குழந்தைக்ள கூடி பேசிக்கொண்டு இருந்தனர். நிசப்தம் நிலவியது. திடீரென்று அனைவரும் எழுந்து நின்று ‘காலை வணக்கம்’ என்றனர். அந்த வணக்கம் நம்மை வெட்கப்படச் செய்தது.

‘தும்பி’ யின் வாசிப்புடன் ஆரம்பித்தது இந்தக் கூடல். ஒவ்வொவரும் அந்தக் கதைக்கு ஒவ்வோர் வடிவம் கொடுத்தனர். பிறகு அறிமுக வட்டமும், அவரவருக்கு பிடித்தமான ஒன்றை பற்றியும் பகிர்ந்து கொண்டோம். காகிதத்தைப் பற்றியும் , அதை பயன்படுத்தும் இடங்கள், பயன்படுத்தியபிறகு உள்ள சுழற்சி, அதனால் வரும் விளைவுகள் என்பன பற்றி பகிர்ந்தோம்.

இவ்விளைவுகளைப் தடுக்க நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு நிராகரித்தல், மறுபயன்பாடு,மறுசுழற்சி என்பன பதிலாக வந்தன. இன்று மறுசுழற்சி பற்றி அறிய அதைச் செய்து பார்த்துக் கற்றுக்கொள்ள முடிவு செய்தோம்.செயல்முறை விளக்கம் கேட்டு வியப்பில் ஆழ்ந்த பின்னர், உற்சாகத்துடன் கைதட்டி செயலில் ஈடுபட்டனர் சிறுவர்கள். முதல் காகிதம் சல்லடையில் இருந்து பிரிந்து வந்தவுடன் உற்சாக ஒலி எழுப்பிக் குதூகலித்தனர். நொடிப் பொழுதில் ஒன்பது கஜம் முழுவதும் காகிதத்தால் மறைந்தது. பின்னர் காகிதத்தில் பூக்கள் மலரத் தொடங்கின. கடிகாரமும், சிலுவையும் , பூச்செண்டும் காகிதத்தில் உயிர் பெறத் தொடங்கின.

காய்ந்த காகிதத்தைக் கையில் பெறுகையில் அனைவர் முகத்திலும் படர்ந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. குதூகலித்த குழந்தைகளைக் கண்டு, தலைமை ஆசிரியரும் காகித மறுசுழற்சியில் கலந்துக் கொண்டார். இறுதியில் அன்றைய செயல்பாட்டின் கருத்துப் பரிமாற்றத்தின் போது ‘நாங்கள் இதை எங்கள் நண்பர்களுக்கும் கற்றுத் தருவோம் , காகிதத்தை வீணடிக்க மாட்டோம்’ என்ற அந்தக் குழந்தைகளின் மௌனச்சொற்களில் இருக்கும் சத்தியம் நம்மை வழி நடத்தப் பிரார்த்திக்கிறோம்.

———————————————————————

July 8,9 . 2017

Cuckoo Forest School

I hear and I forget – I see and I remember – I do and I understand

Confucius

Untitled-1

        Process of recycled paper making

With the reverberating slogans and probing posters saying – ‘Save water save life’, ‘Plant more trees’, ‘Go Green’ etc. various organizations are spreading awareness to varied sector of people. When all our focus is towards saving water and water bodies, we seldom understand the amount of water used in manufacturing of materials we use. Let us take paper for instance. A sheet of A4 paper takes about 10 litres of water to be manufactured. Though we talk about paperless institutions and e- books we are not in a stance to avoid hard bound books and notebooks. With an array of methods and techniques available all over to recycle and reuse paper, we at ‘Akarmaa Seek’ firmly believe any process is incomplete if we don’t understand the sense behind, and none of the process will endure if it doesn’t embrace the kids in it.

In every walk of our life kids keep inspiring us. With this inspiration we landed in ‘Cuckoo’ forest school on 8th July 2017.  Motivational vibes all around, be it the smile of Nellivasal government school kid Surya, or the abnormally curious SriVishnu we started the day with lots of vigor. Striking conversation became alluring when children opened up with ideas about the number of trees destroyed in the process of manufacturing a sheet of paper.  Continuing the discussion about amount of water used in the manufacturing process we roamed around the forest collecting dry leaves and flowers. Never in our groove would we have imagined ‘tearing’ of paper will be such an interesting task. Exceedingly enthusiastic children completed the entire process of tearing, grinding the paper into paper mache within less margin of time. Once the trainer elucidated the instructions children instantly plunged into action. Yes! They made mistakes while unmolding first few sheets out of the mould. But once they got the art of doing it they handled it with ease.

When government school children of Puliyanur Village joined on the second day 9th July 2017, along with paper making they were also involved in other creative crafts with recycled paper and paper mache. They created fascinating stamp painting, lamp shades, hangings and holders with the available raw material ‘paper’ and ‘paper mache’. Previously involved in creating awareness against plastic bags these children also learnt and enjoyed making paper bags as a substitute for plastic bags. Never tired with the array of activities, they wound up their day with a meaningful play enacted by them along with their trainers. Nobody else can enact the play so impressively other than these small kids which demonstrated the importance of reuse and recycling. Collecting ‘recycled paper’ in their ‘paper bags’ they waved happily ever after

19942671_1423424407733527_392786598746329250_o

“You must be the change you wish to see in this world”

 

  • Mahatma Gandhi

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s